[X] Close

விபத்தில் சிக்கிய கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வானதி சீனிவாசன் மகன்

தமிழ்நாடு

Car-involved-in-the-accident-Fortunately-Vanathi-Srinivasans-son-survived

சேலம் அருகே கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி அவர் உயிர் தப்பினார்.


Advertisement

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஸ் (22). இவர், நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தில் கார் அதிவேகமாக வந்துபோது, தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

image


Advertisement

இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆதர்சை மீட்டனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவலறிந்த பாஜக நிர்வாகிகள், ஆதர்சை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாம்: சினிமாவை மிஞ்சும் வகையில் தனியார் வேனை சேஸிங் செய்த அரசு பஸ்: திருவாரூரில் நடந்தது என்ன?


Advertisement

Advertisement
[X] Close