[X] Close

“விளாதிமீர் புதின்” என மகனுக்கு பெயர் வைத்த ஸ்வீடன் தம்பதி - பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள்

உலகம்

Swedish-couple-named-their-son-Vladimir-Putin-and-Sweden-Tax-authorities-refused-to-register-the-name

ஸ்வீடன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லஹோல்ம் நகரில் வசித்து வரும் தம்பதியர் அண்மையில் தங்களுக்கு பிறந்த மகனுக்கு ரஷ்ய அதிபரை நினைவு கூறும் வகையில் ‘விளாடிமிர் புதின்’ என பெயரிட்டுள்ளனர். அந்த நாட்டின் சட்டப்படி அந்த பெயரை Swedish Tax Agency முகமையில் பதிவு செய்ய வேண்டும். அங்கு வரி வசூல் பணியுடன், மக்கள் தொகை பதிவையும் இந்த முகமை நிர்வகித்து வருகிறது. 


Advertisement

image

இந்த நிலையில் அந்த பெயரை பதிவு செய்ய சென்று சென்றுள்ளனர் தம்பதியர். ‘இந்த பெயர் கூடாது’ என அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு வேறு பெயருடன் அணுகுமாறு அந்த தம்பதியரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த பெயர் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. 


Advertisement

image

இதற்கு முன்னதாக அல்லா, ஃபோர்ட், மைக்கேல் ஜாக்சன், Q மாதிரியான பெயர்களை பதிவு செய்யாமல் அந்த முகமை நிராகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 2007-இல் Metallica என்ற பெயரை அந்த முகமை பதிவு செய்யாமல் நிராகரித்துள்ளது. அதற்கு அந்த குழந்தையின் பெற்றோர் சட்டப்போராட்டம் நடத்தியதன் மூலம் அந்த பெயரை பதிவு செய்துள்ளனர்.    

இதையும் படிக்கலாம் : அதீத நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல்... கனடாவில் மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ? 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close