சென்னை எண்ணூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை எண்ணூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை எண்ணூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை எண்ணூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலத்த மழையும் பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை - எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

முன் அறிவிப்பை குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்காலில் தனியார் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனினும் நாகை மாவட்டம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால், மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மீன்பிடித் துறைமுகமான பாம்பன் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் சின்னம் காரணமாக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com