[X] Close

திமுகவின் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா: என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

சிறப்புக் களம்

leaders-talk-about-Neet-exam

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தலைவர்களின் கருத்துகளை பார்ப்போம்.


Advertisement

நீட் விலக்கு சட்டமசோதா தொடர்பாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், 'சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்பார்த்த ஒன்று தான். கடுமையாக போராடி இதில் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. அடுத்த ஆண்டு நீட் இல்லாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும் என நம்புகிறோம். அவர்கள் கொண்டுவந்த நீட் தேர்வுக்கான ஒட்டுமொத்த நோக்கமுமே சிதைந்துள்ளது.

image


Advertisement

ஒரு மாணவன் 114 மார்க்கைவிட குறைவாக எடுத்திருந்தாலும் பரவாயில்லை என கூறுகிறார்கள். அப்படிபார்த்தால் தனியார் மருத்துவமனைக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. குவாலிடி எங்கிருந்து வரும்? நீட் தேர்வுக்கான அர்த்தம் நீர்த்துவிட்டது. இதையெல்லாம் முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு போராடி நாம் வெற்றி பெற வேண்டும்'' என்றார்.

பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''நீட் தேர்வு மாணவர்களின் திறமையை வளர்க்ககூடியது. தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இது கொண்டுவரப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் 7.5சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. திமுக தமிழக மாணவர்களை ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வு நடைபெறாது என கூறி வந்த திமுக, அதையே நம்பி வந்த மாணவர்கள், நீட் தேர்வு நடைபெற்றதும் திமுகவின் தவறான வழிகாட்டுதலால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது. மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை முன்னேற்றும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்'' என்றார்.

image


Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. திமுகவும் தற்போது தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இரண்டு தீர்மானத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. திமுகவின் தீர்மானம் உளப்பூர்வமாகவும், கொள்கை ரீதியாகவும், மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் கொண்டுவந்த தீர்மானம். அதிமுகவின் தீர்மானம் ஒரு கண்கட்டி வித்தையை போன்றது. மத்திய அரசின் விரோதத்தை சம்பாதித்துவிடக்கூடாது, தமிழ்நாட்டில் தனது பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக செயல்பட்டார்கள்.

image

அதற்கு உதாரணம் தான் இப்போது அதிமுக பேரவையிலிருந்து வெளியேறியது. உண்மையில் அவர்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என கருதினால் திமுக கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. பாஜக நேரடியாக சொல்லிவிட்டது. ஆனால், அதிமுக இரட்டை ஆட்டம் ஆடுகிறது. அது தான் தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு புறம்பானது. மாநில அரசின் கருத்துகளை மத்திய அரசு புறந்தள்ள கூடாது. அப்படி செய்தால் மத்திய அரசுக்கு பாதகமாக அமையும்'' என்றார்.


Advertisement

Advertisement
[X] Close