[X] Close

நீட் தேர்வு: ஈபிஎஸ் - முதல்வர் காரசார விவாதம் - அதிமுக வெளிநடப்பு!

தமிழ்நாடு

admk-walk-out-from-assembly-over-neet-argument

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


Advertisement

சட்டப்பேரவையின் இறுதிநாளான இன்று பேரவை கூடியதும் நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக விவாதம் எழுந்தது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தீர்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் நேற்று மாணவர் ஒருவர் இறந்துள்ளார்' என்று கூறினார்.

image


Advertisement

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், 'ஜெயலலிதா இருக்கும்போது கூட நீட் தேர்வு வரவில்லை. நீங்கள் இருக்கும்போதுதான் வந்தது' என ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து திமுக - அதிமுக இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன. நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்ததும், அங்கிருந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கறுப்பு பேஜ் அணிந்து வந்திருந்தனர். 


Advertisement

Advertisement
[X] Close