Published : 13,Sep 2021 08:01 AM
கணவரோடு வாழவிடுங்கள்! - ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டின் முன் புதுமணப் பெண் தர்ணா

கணவரிடம் இருந்து பிரிக்க முயற்சிப்பதாக ஊராட்சிமன்றத் தலைவர் வீட்டின் முன்பு புதுமணப் பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேவதாஸுக்கு வினோத் என்ற மகன் உள்ளார். அதேப்பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணை காதலித்த வினோத், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தாயைப் பார்க்க வேண்டுமென கூறிவிட்டு சென்ற வினோத், தன்னோடு சேர்ந்து வாழ வர மறுப்பதாக மாலினி குற்றம் சாட்டியுள்ளார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள், இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். பின்னர் கணவரின் தந்தையான ஊராட்சிமன்றத் தலைவர் வீட்டில் மாலினியை தங்க வைத்துள்ளனர்.