[X] Close

பயிற்சியாளர் இருக்க தோனியை வழிகாட்டியாக அறிவித்தது எப்படி? - கேள்வி எழுப்பும் அஜய் ஜடேஜா

விளையாட்டு

It-is-a-mystery-to-understand-what-could-have-happened-overnight-former-Indian-Cricketer-Ajay-Jadeja-Questions-on-Dhoni-s-appointment-as-Indian-Team-Mentor-in-T20-Cricket-World-Cup--

டி20 கிரிக்கெட் உலக கோப்பை 2021 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் தோனியை நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா. 


Advertisement

image


Advertisement

கடந்த 9-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை அறிவித்தது. அதில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் அணியின் வழிகாட்டியாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“எனக்கு தோனியின் நியமனம் வியப்பாக இருந்தது. நான் தோனியின் தீவிர ரசிகன். தனது ஓய்வுக்கு முன்னதாகவே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்த கேப்டன் அவர். 

இந்தியாவை கிரிக்கெட் உலகின் நம்பர் 1 அணியாக மாற்றிய பயிற்சியாளர் இருக்கையில் அணியை வழிநடத்த வழிகாட்டி ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒரே நாள் இரவில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது” என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். 


Advertisement

image

குரூப் 2-வில் இடம் பெற்றுள்ள இந்தியா, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது.

இதையும் படிக்கலாம் : “இது மாதிரியான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்” - டிம் பெய்ன் கருத்தை கண்டித்த அஸ்கர் ஆப்கன் 


Advertisement

Advertisement
[X] Close