Published : 12,Sep 2021 06:37 PM
உபி சட்டசபை தேர்தலில் சிவசேனா 100 தொகுதிகளில் போட்டியிடும்: சஞ்சய் ராவத்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சிவசேனாகட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும்என்று அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “ சிவசேனா கட்சி உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளில் சுமார் 100 இடங்களில் போட்டியிடும் என்றும், கோவா சட்டசபையில்மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும்” என்றும் தெரிவித்தார். மேலும், தங்கள் கட்சிக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனைப்படிக்க: மாணவர் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது - முதல்வர் அறிக்கை