“இது மாதிரியான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்” - டிம் பெய்ன் கருத்தை கண்டித்த அஸ்கர் ஆப்கன்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் டிம் பெய்ன் கருத்துக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அஸ்கர் ஆப்கன் வன்மையாக கண்டித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் சூழலை வைத்து டிம் பெய்ன் அந்த நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்னவாகும் என்ற சூழலில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் ஆப்கன் அணியுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது சந்தேகம் தான். அதனால் அந்த அணியுடன் விளையாடுவதை மற்ற அணிகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில்தான் அவரது கருத்தை கண்டித்துள்ளார் அஸ்கர் ஆப்கன்.
“மிஸ்டர் பெய்ன். ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிர்வரும் உலக கோப்பை தொடர் மட்டுமல்ல அனைத்து ஐசிசி போட்டிகளிலும் விளையாட உரிமை உள்ளது. எங்கள் நாட்டில் உள்ள உள்கட்டமைப்புகளை கொண்டு உலகின் டாப் 10 அணிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடி வருகிறோம். அதற்கு காரணம் எங்களது உழைப்பு. தொழில்முறை கிரிக்கெட்டில் இதை எட்டுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் தான் சொல்கிறேன் இது மாதிரியான பேச்சுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று.
சர்வதேச கிரிக்கெட் அணிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 17 அன்று அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.