[X] Close

“டிராவிட், லக்ஷ்மண் காலத்தைப் போன்று இன்றைய இந்திய டெஸ்ட் அணி இல்லை” - ஷேன் வார்னே

விளையாட்டு

Shane-Warne-feels-Current-Indian-Batting-Unit-in-Test-Cricket-was-not-that-much-strong-during-the-time-of-Dravid-Ganguly-Tendulkar-Laxman-and-Sehwag

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்டிங்  டிராவிட், லக்ஷ்மண் காலத்தைப் போன்று வலுவானதாக இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.


Advertisement

“இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய டெஸ்ட் பேட்டிங் வலுவானதாக இல்லை. டிராவிட், கங்குலி, டெண்டுல்கர், லக்ஷ்மண், சேவாக் என அப்போதைய அணியின் பேட்ஸ்மேன்கள் சர்வதேச பவுலர்களை பந்தாடினார்கள். அது போல இப்போதைய இந்திய அணி இல்லை. 

image


Advertisement

கோலி, பூமிக் கோளின் சிறந்த பேட்ஸ்மேன் தான். இருந்தாலும் அப்போதைய டாப் 5 பேட்டிங் ஆர்டர் மிகவும் பலம் வாய்ந்தது. 

கோலி, ரோகித் அதன் பிறகு லோயர் ஆர்டரில் பண்ட் என சிறந்த பேட்ஸ்மேன்கள் இப்போது உள்ளனர். ஆனால் இன்றைய இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த பந்துவீச்சாளர்கள் தான் காரணம்” என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக அயலக மண்ணில் வெற்றி நடை போட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாதிரியான நாடுகளில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதே அதற்கு சான்று. 


Advertisement

இதையும் படிக்கலாம் : 'இனியாவது நீட் பற்றி உண்மையை சொல்லுங்கள்' - உயிரிழந்த மாணவன் உடலுக்கு ஈபிஎஸ் நேரில் அஞ்சலி 


Advertisement

Advertisement
[X] Close