[X] Close

ரவுடி ராதாகிருஷ்ணனின் பெயரை சொல்லி தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கூட்டாளிகள் கைது

தமிழ்நாடு

Associates-arrested-for-trying-to-extort-money-from-a-businessman-by-naming-a-prisoner
தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற அரும்பாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். 
சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் எபனேசர். இவர் ‘ஆர்ஜி ஆம்புலன்ஸ்’ என்ற நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். நேற்று இவரது செல்போனுக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர், "அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணன் வருகிற 15-ம் தேதி கோர்ட்டுக்கு வர உள்ளார். அப்போது நீ ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொண்டு வா. இல்லையென்றால் உன் தலை சிதறி விடும்" எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
image
இது தொடர்பாக எபனேசர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பிரிவு 385 (மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தல்), பிரிவு 506(1) (கொலை மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் குறிப்பிட்ட ரவுடி ராதாகிருஷ்ணன் என்ற நபர், வேலூர் சிறையில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளான பாஸ்கர், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வடிவேலு ஆகியோர் மீது இவ்வழக்குகளை வில்லிவாக்கம் போலீசார் பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு மட்டுமன்றி பாஸ்கர், வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே வடிவேலு மீது கொலை, கொலை முயற்சி உள்பட 12 வழக்குகள் உள்ளது. பாஸ்கர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 25 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
[X] Close