Published : 12,Aug 2017 12:41 PM
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மழை பெய்த காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஸ்டாலின், மழை காரணமாக தொடகத்திலேயே முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மீண்டும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 10ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி 75 ஆம் ஆண்டு பவளவிழா நடந்தது. விழாவில், இந்து என்.ராம், திணமனி ஆசிரியர் வைத்தியநாதன், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அடுத்த நாள் 11ம் தேதி பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.