Published : 11,Sep 2021 05:29 PM
ஐபிஎல் : இங்கிலாந்திலிருந்து அமீரகம் திரும்பிய மும்பை அணியின் சீனியர் வீரர்கள்

கொரோனா தொற்று பரவலால் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் விதமாக அனைத்து அணி வீரர்களும் முன்கூட்டியே அமீரகம் சென்று முகாமிட்டுள்ளனர். பயிற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ரோகித் ஷர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ் என மும்பை இன்டியன்ஸ் அணியின் மூன்று வீரர்களும் இங்கிலாந்தில் இருந்து தனி விமானத்தில் அமீரகம் திரும்பி உள்ளனர். இதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மூவரும் குடும்பத்தினருடன் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் அமீரகம் என இரு இடங்களில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மூவரும் தற்போது ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்திலிருந்து திரும்பும் வீரர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம் : ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு