[X] Close

மும்பை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்பு ராடால் சித்ரவதை - பெண் உயிரிழப்பு

குற்றம்

A-woman-who-was-sexually-assaulted-was-died-at-a-hospital-in-Mumbai-City-Maharashtra-State-of-India

மும்பை - அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள Sakinaka-வில் 34 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சாலையோரத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து போலீசாரால் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். அவர் இரும்பு ராடால் குற்றம் இழைத்த கொடூரர்களால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

image

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்து பார்த்ததில் சில துப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த பெண் கண்டெடுக்கப்பட்ட சாலையில் ரத்தக் கரைகள் படிந்த டெம்போ ஒன்று நின்றதாகவும் PTI செய்தி வெளியிட்டுள்ளது. 


Advertisement

மேலும் 45 வயதான மோகன் சவுகான் என்ற நபர் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் PTI தெரிவித்துள்ளது. இந்த கொடுமையை ‘காட்டுமிராண்டித்தனம்’ என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. போலீசார் இந்த வழக்கை விரைவாக விசாரித்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது. அதில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மனிதத்தன்மைக்கு இது அவமானம். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க, இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இதையும் படிக்கலாம் : ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close