Published : 30,Jan 2017 02:20 AM

டெல்லியில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்

All-party-meeting-today-at-delhi

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், அதிமுக, திமுக, திரிணாமு‌ல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நாளை மறுநாள் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

‌பொது பட்ஜெட்டுடன் ரயில்வே துறைக்கான அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன. வரும் ஆண்டில் ரயில்வே பட்ஜெட் கிடையாது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வறட்சியால் விவசாயிகள் எதிர் கொண்டுள்ள பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்