[X] Close

கண்முன்னே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகள் - சோகம் தாளாமல் தந்தை தற்கொலை

வீடியோ ஸ்டோரி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மலைக் கோவில் குளத்தில் இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சூழலில், இவர்களின் தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட துயரம் நேர்ந்துள்ளது.


Advertisement

ஆம்பூரை அடுத்த கடம்பூர் கைலாசகிரி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் - மீனாட்சி தம்பதியின் இரண்டு குழந்தைகளும் தந்தையுடன் மலைப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். லோகேஸ்வரன் பாறை மீது அமர்ந்து ஓய்வு எடுக்க, அங்குள்ள குளத்தில் குழந்தைகள் மீன்பிடித்து விளையாடியுள்ளனர். அப்போது சிறுமி ஹரி பிரீத்தாவும், சிறுவன் ஜஸ்வந்தும் நீரில் மூழ்கியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை லோகேஸ்வரன், குளத்தில் குதித்து இரு குழந்தைகளையும் காப்பாற்ற முயன்றும் பலன் கிடைக்கவில்லை என தெரிகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சென்று, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தைகளை சடலமாக கண்டெடுத்தனர்.

மலைப் பகுதியிலிருந்து சடலங்களை கொண்டு செல்ல வசதி இல்லாததால் ஜஸ்வந்தின் உடலை டோலி கட்டியும், ஹரி பிரீத்தாவின் உடலை தோளில் சுமந்த படியும் இரண்டு கிலோ மீட்டர் வரை சென்ற காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

இந்நிலையில், கண்முன்னே 2 குழந்தைகளையும் பறிகொடுத்த துயரத்தில், தந்தை லோகேஸ்வரன் இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement


Advertisement

Advertisement
[X] Close