[X] Close

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விளையாட்டு

Novak-Djokovic-advanced-to-the-men-s-singles-final-of-the-US-Open-tennis-series
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
 
அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவை எதிர்கொண்ட ஜோக்கோவிச் முதல் செட்டை 4 க்கு 6 என்ற கணக்கில் இழந்தார். பின்னர் அதிரடியை வெளிப்படுத்திய ஜோக்கோவிச் இரண்டாவது செட்டை 6 க்கு 2 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6 க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் 4 ஆவது செட்டை 6 க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றவே 5 ஆவது மற்றும் இறுதிச் சுற்றில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
 
image
ஆனால் 5 ஆவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச், 6 க்கு 2 என்ற கணக்கில் ஸ்வரேவை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்த்து ஜோக்கோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close