Published : 11,Sep 2021 10:58 AM

சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயம்: வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மீதுன் (2). இவன் நேற்று மாலை ஒரு ரூபாய் நாணயத்தை வாயில் வைத்திருந்தபோது அதை விழங்கியுள்ளான். இதையடுத்து அந்த நாணயம் சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதை கவனித்த அவனது பெற்றோர், அவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை தனியார் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தயுள்ளனர்.

image

இதையடுத்து சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது சிறுவனின் தொண்டையில் நாணயம் சிக்கி இருப்பது தெரியவந்தது உடனடியாக மருத்துவர்கள் டுயுலுலுNபுழுளுஊழுPலு என்ற ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிகரமாக அகற்றினார்கள்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்