[X] Close

ஆப்கான்: முன்னாள் துணை அதிபரின் சகோதரர் சித்ரவதை செய்து கொலை

உலகம்

The-Taliban-have-reportedly-tortured-and-killed-the-brother-of-a-former-vice-president-in-Afghanistan
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருலே சாலே, தாமே அதிபர் எனக் கூறியிருந்தார். மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்களை எதிர்த்து போராடி வந்தது.
 
image
இந்நிலையில் பஞ்ச்ஷிர் பகுதியில் ஏற்பட்ட சண்டையில், அம்ருலே சாலேவின் சகோதரர் ரூகுலா சாலேவை தலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்ச்ஷிர் மாகாணத்தை, தலிபான்கள் கைப்பற்றியதாக கூறியிருந்தாலும், தேசிய கிளர்ச்சிப் படையினர் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 

Advertisement

Advertisement
[X] Close