Published : 11,Sep 2021 08:05 AM

வாயின் உட்பகுதியில் மறைத்து 951 கிராம் தங்கம் கடத்தல்: உஸ்பெஸ்கிஸ்தான் பயணிகள் இருவர் கைது

Two-men-were-arrested-at-the-Delhi-airport-for-smuggling-about-a-kilo-of-gold-hidden-inside-the-mouth
வாயின் உட்பகுதியில் மறைத்து சுமார் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
 
தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பயணிகளை சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் தங்களது வாயின் உட்பகுதியில் பற்கள் மற்றும் செயின் வடிவில் 951 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்