[X] Close

கேரளாவில் மேலும் 25,010 பேருக்கு தொற்று உறுதி; பின்னடைவில் கொரோனா பரிசோதனைகள்

கொரோனா வைரஸ்

covid-today-update-kerala

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,51,317 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், மேலும் 25,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

முன்னதாக 1,56,957 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 29,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து பார்க்கும்போது, கடந்த 2 ம் தேதிக்குப்பின் நேற்றைய தினம் மட்டும் தொற்று 30 ஆயிரத்தை கடந்தது. பலருக்கும் அது அச்சமளித்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. அதேநேரம், பரிசோதனைகளை பொறுத்தளவில் நேற்றைவிட இன்று 5,640 பரிசோதனைகள் குறைந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதனால்கூட தொற்று எண்ணிக்கையில் 4,190 குறைந்திருக்கக்கூடுமென சொல்லப்படுகிறது.

இன்றைய பாதிப்பின் முடிவில், கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,09,694 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

தொடர்புடைய செய்தி: அதிகரிக்கும் கொரோனா பரவல்: தடுப்பூசி, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கும் கேரளா

இன்று ஒரு நாளில் கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 177 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,303 என உயர்ந்துள்ளது.

image


Advertisement

பிற விவரங்கள் குறித்து மருத்துவத்துறை தெரிவிக்கையில், “தற்பொழுது கேரளாவில் மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 2,37,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் 23,535 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 40, 74,200 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவின் இன்றைய டெஸ்ட் பாஸிட்டிவிட்டி ரேட் 16.53 சதவீதமாக உள்ளது. நேற்றைய டிபிஆர்., 16.69 ஆக இருந்தது. டிபிஆரும் நேற்றைவிட 16 சதவீதம் குறைந்துள்ளது” என்றுனர்.

இவ்விவரங்களை பற்றி கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவிக்கையில், “தொற்று குறைவதாக கணக்கில் கொள்ள முடியாது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் கொரோனா விதிகளை கட்டாயம் கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து தஙக்ளை தற்காத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close