Published : 10,Sep 2021 05:38 PM
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் - சீனா அதிபர் ஸீ ஜின்பிங் பேச்சு
ஆப்கானிஸ்தான், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா சீனா இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக சீனா அதிபர் ஸீ ஜின் பிங்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேசியதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, வர்த்தக உறவு, சர்வதேச அரசியல் நிலவரம், கொரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்ற பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி , மோதலாக மாறிவிடக் கூடாது என ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
சென்னை பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் தொடர் கொள்ளை சம்பவம்; மக்கள் அச்சம்