[X] Close

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தாவை எதிர்த்து பிரியங்காவை களமிறக்கிய பாஜக

இந்தியா

BJP-fields-Priyanka-Tibrewal-to-take-on-Banerjee-in-Bhabanipur-bye-elections
பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவாலை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. 
 
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் மம்தா முதலமைச்சராகப் பதவியேற்றதால், அவர் 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும்,வேளாண் துறை அமைச்சராகவும் இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
image
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக எந்த வேட்பாளரையும் காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை. 
 
இந்தநிலையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவாலை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகரான பிரியங்கா திப்ரேவால் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவர், திரிணாமுல் காங்கிரஸ் போட்டியாளரிடம் தோல்வியடைந்தார்.
 

Advertisement

Advertisement
[X] Close