[X] Close

தமிழ்நாடு வரவேற்கிறது! - புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு

Tamil-Nadu-Chief-Minister-MK-Stalin-Wished-Newly-appointed-Governor-of-the-State-R-N-Ravin-through-Twitter

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர். என். ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது என தெரிவித்துள்ளார். தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்றும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து விடைபெறும் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைப்பதாக முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தன்னிடம் தனிப்பட்ட முறையில் அன்புடன் பழகியவர் பன்வாரிலால் புரோகித் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். என். ரவியின் பணி சிறக்க வாழ்த்துவதாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close