[X] Close

அரசின் அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடத்தக் கூடாது -தலிபான்கள்

உலகம்

should-not-protest-without-government-permission---Taliban

ஆப்கானிஸ்தானில் அரசின் முன் அனுமதி பெறாமல் போராட்டங்கள் எதையும் நடத்தக்கூடாது என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.


Advertisement

தலிபான்கள் பொறுப்பேற்றது முதலே காபூல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் அரசின் முன் அனுமதி பெறாமல் போராட்டம் எதையும் நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பயன்படுத்த கூடிய பதாகைகள், அதில் இடம்பெறும் வாசகங்களுக்கு கூட முன் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க: ஷாருக்கான் - அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ராணா? 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close