நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி
நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

 நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதற்கான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடக்கி வைப்பார் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தின் போது உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள விவசாயிகள் இலவச மின் இணைப்புக் கோரி 18ஆண்டுகளாக காத்திருப்பதாகக் குறிப்பிட்டார், விரைவில் அவ்விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநிலத்தில் 4 லட்சத்து 52ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தெரிவித்தார். நடப்பு ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகக் குறிப்பிட்ட மின்துறை அமைச்சர், இதற்கான திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடக்கி வைப்பார் என்றும், அப்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள 4ஆயிரத்து 554 விவசாயிகளும் பயனடைவர் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com