[X] Close

சத்தியமங்கலம்: வாகனங்களை வழிமறிக்கும் யானைகளால் போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு

Sathyamangalam--Traffic-damage-caused-by-elephants-diverting-vehicles

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பகல் நேரங்களிலேயே வாகனங்களை யானைகள் வழிமறிப்பதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

சத்தியமங்கலம்- மைசூர் சாலையில் வரும் லாரிகளில் இருந்து விழும் கரும்புத் துண்டுகளை சாப்பிடுவதற்காக யானைகள் முகாமிட்டுள்ளனர். அவ்வாறு காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் இரண்டு காட்டு யானைகள், தனது குட்டிகளுடன் சாலையில் சிதறிய கரும்புத் துண்டுகளை தின்றபடி வெகுநேரம் நின்றன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தினமும் யானைகள் வழிமறிப்பதால், உடனடியாக வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனைப்படிக்க: கொரோனா எதிரொலி: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகளை விதித்த சென்னை காவல்துறை 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close