[X] Close

“இந்திய கிரிக்கெட் அணியை தோனியை விட யாரும் சிறப்பாக வழிநடத்த முடியாது”- பிசிசிஐ

விளையாட்டு

Why-was-Former-Indian-Cricket-Team-Captain-MS-Dhoni-appointed-as-the-Mentor-of-the-Indian-team-in-the-T20-World-Cup-BCCI-official-explains

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்த முறை அவர் அணியின் வழிகாட்டியாக பணியாற்ற உள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 துவங்கி நவம்பர் 14 வரை நடை பெற உள்ளது. 


Advertisement

image

இந்திய அணியுடன் தோனி இணைந்திருப்பது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது. இந்த சூழலில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வழிகாட்டியாக தோனி நியமிக்கப்பட்டது ஏன்? என்ற விளக்கத்தை இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். 


Advertisement

“இந்த இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறம்பட செய்துவிட முடியாது. அணியில் அவர் இருப்பதே வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். அதை எங்கள் செயலாளர் ஜெய் ஷாவும் விரும்பினார். அதன் படி தோனிக்கு போன் செய்து அவரது விருபத்தையும் தெரிந்து கொண்ட பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார். 

வரும் அக்டோபர் 24-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close