[X] Close

ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

minister-sengottaiyan-warning-to-teacher

பாலியல் புகார்களுக்குள்ளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement

பள்ளிகளில் பணிபுரியும் சிறுவர் சிறுமிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்து வருவதாக பல இடங்களில் புகார் எழுந்து வருகிறது. இதனால் ஆத்திரமடையும் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் புகார்களுக்குள்ளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close