[X] Close

கொரோனா: பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் ஆட்சியர் 

தமிழ்நாடு

The-district-attorney-questioned-the-barrage--asking-for-an-explanation-from-the-head-teacher-who-gave-the-school-a-holiday
கரூர் மாவட்டம் உப்பிடமங்களம் அருகே பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
 
பொரணி கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், அப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் விடுமுறை அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். வெறிச்சோடி காணப்பட்ட பள்ளியை கண்டு மாணவர்கள் எங்கே எனக் கேட்டார். பள்ளியில் 3 பேர் கொரோனா பாதித்தால் மட்டுமே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது எதனடிப்படையில் விடுமுறையில் அளித்தீர்கள் என அடுக்கடுக்காக வினா எழுப்பினார்.
 
image
மேலும் குறைவான ஆசிரியர்கள் இருப்பதை கண்ட ஆட்சியர், விடுமுறை எடுத்த ஆசிரியர்களிடம் காரணம் கேட்டு விளக்க கடிதமும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
 

Advertisement

Advertisement
[X] Close