[X] Close

இந்திய அணி பேட்டிங்: இடம்பிடித்தார் குல்தீப்

India-bat--Kuldeep-Yadav-replaces-Jadeja

இலங்கை அணியுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கியுள்ளது. அணியில் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார்.


Advertisement

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்ட்டுகளில் இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி, பல்லகெலேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இலங்கை அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

இந்திய தரப்பில் ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். கே.எல்.ராகுலும் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close