[X] Close

ரஷ்ய அமைச்சர் மரணம்: மற்றவரை காப்பாற்ற சென்றபோது நேர்ந்த விபரீதம்!

உலகம்

Russian-Emergencies-Minister-Dies-in-Accident

ரஷ்ய அவசர சூழ்நிலைகளுக்கான அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ் (55), ஆர்க்டிக் பகுதியில் சிவில் பாதுகாப்பு மற்றும் இராணுவ பயிற்சியின்போது திடீரென மரணமடைந்தார் என்று அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.


Advertisement

அந்த அறிக்கையில், “ஆர்க்டிக் மண்டலத்தை அவசரக்காலத்தில் பாதுகாக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

அரசின் உதவியுடன் இயங்கும் ஆர்.டி செய்தியின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோன்யான் கூறுகையில், தவறி தண்ணீரில் விழுந்த கேமராமேனை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் உயிரிழந்ததாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தின்போது பலர் அங்கு இருந்திருந்தாலும் என்ன நடந்ததென்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.


Advertisement

தலைவர்கள் நினைவாக நிறுவப்படும் சிலைகள் - ஆக்கப்பூர்வமானதா? அவசியமற்ற செலவா? 

இதுகுறித்து ஆர்.பி.சி செய்தி, பாறையின் உச்சியிலிருந்து ஒரு சினிமாக்காரர் தவறிவிழுந்தபோது அவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் தவறிவிழுந்ததாகவும், இதில் இருவருமே இறந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறது. மேலும், ஜினிச்சேவ் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட பாதுகாப்பு விவரங்களையும் அறிந்தவர் என்று கூறியிருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close