[X] Close

தீப்பிடித்து எரிந்த அரசு ஏசி பஸ்: பயணிகள் தப்பினர்

Govt-bus-catches-fire

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடக அரசு சொகுசுப்பேருந்து ஒன்று பூந்தமல்லி அருகே தீப்பிடித்து எரிந்தது. 


Advertisement

ஓட்டுநர், நடத்துநர் உட்பட 42 பேருடன் வந்து கொண்டிருந்த இந்த பேருந்து, திருமழிசை கூட்ரோடு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்பதால் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து பேருந்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய 45 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்து முற்றிலும் கருகியது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close