[X] Close

தடைசெய்யப்பட்ட இடத்தில் சிகரெட்: தமிழருக்கு 6 மாதம் சிறை

Indian-origin-Ramasamy-Soogumar-jailed

சிங்கப்பூரில் அதிகாரிகளை தாக்கியதாக, தமிழர் ஒருவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

சிங்கப்பூரில் துப்பரவு பணி செய்துவருபவர், ராமசாமி சுகுமார். தமிழரான இவருக்கு வயது 59. இவர் கடந்த மே மாதம், புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட இடத்தில் பியருடன் சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார். இதை கண்ட, தேசிய சுற்றுச்சூழல் அதிகாரிகளான குகன், சால்வின் கவுர் ஆகியோர் நோட்டீஸ் எழுதி, கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அவரிடம் கூறினார். இதனால் கோபமான ராமசாமி சுகுமார், தமிழில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் குகனை தாக்கினாராம். இதையடுத்து அந்த வழியாக வந்த சார்ஜெண்ட்டையும் போதையில் தரக்குறைவாக தமிழில் திட்டினாராம். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராமசாமி சுகுமாருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close