[X] Close

மகாராஷ்டிராவில் கொரோனா 3-வது அலை தொடக்கம்

கொரோனா வைரஸ்

It-has-been-reported-that-the-3rd-wave-of-Covid-has-started-in-Maharashtra-
மகாராஷ்டிராவில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக குறைந்துவந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி துறை அமைச்சர் நிதின் ராவத், நாக்பூரில் 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும், விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றார்.
 
image
இதனிடையே, தலைநகர் மும்பையில் தினசரி பாதிப்பு 400-ஐ தாண்டிய நிலையில், 3-வது அலை தொடங்கிவிட்டதாக மேயர் கிஷோரி பெட்னேகர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். எனினும், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், மும்பையில் கொரோனா 3-வது அலை தொடக்கத்தில் இருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close