[X] Close

தொடரை சமன் செய்தது இந்தியா... ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

India-Beat-England-by-5-runs

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நாகபூரில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, கே.எல்.ராகுலின் 71 ரன்கள் உதவியுடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நெஹ்ரா அதிர்ச்சி அளித்தார். இந்த இழப்பிலிருந்து கடைசிவரை மீளாத இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 38 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close