[X] Close

“எல்லாம் கருணாநிதி மயம்” – திமுக ஆட்சியில் கருணாநிதி பெயரில் வெளியான அறிவிப்புகள் பட்டியல்

சிறப்புக் களம்

-Everything-is-Karunanidhi----List-of-announcements-in-the-name-of-Karunanidhi-issued-during-the-DMK-regime

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியின் பெயரில் பல்வேறு திட்டங்களும், அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அவற்றின் பட்டியல் இதோ…


Advertisement

சட்டபேரவையில் கருணாநிதி படம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், வ.உ.சிதம்பரனார், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 15 பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன, இதில் 16 வதாக கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது.


Advertisement

image

கருணாநிதி பெயரில் அரசு கலைக்கல்லூரி:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் கலசபாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை திருவண்ணாமலை கலை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று அந்த கலைக்கல்லூரிக்கு கருணாநிதியின்  பெயர் சூட்டப்படும் என அமைச்சர் பொன்முடி பேரவையில் அறிவித்தார்.


Advertisement

கருணாநிதி செம்மொழி விருது:

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 2010 முதல் வழங்கப்படாமலிருக்கும் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது இனி ஒவ்வோராண்டும் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் மாதம் 3ந் தேதி அன்று  10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

image

கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்டங்கள்:

2021 ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கோவில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அரசுப்பேருந்துகள் திருநங்கைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஜூன் 3 ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

மதுரையில் கலைஞர் நூலகம்:

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன்கூடிய வகையில், 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

image

புதுப்பொலிவுடன் கருணாநிதி நினைவகம்:

சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் சென்னை காமராஜர் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் 39 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவுடன் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கருணாநிதியின் சாதனைகளை எடுத்துரைக்கும் விளக்கப்படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின், நினைவிடத்திற்கான மாதிரியையும் வெளியிட்டார்.

கருணாநிதிக்கு சிலை:

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில்  அறிவித்துள்ளார். அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், சட்ட வல்லுனர்களை ஆலோசித்து இந்த சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனைப்படிக்கஅஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை -  யார் யாருக்கு சிலைகள்? 

  


Advertisement

Advertisement
[X] Close