புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவித்து வந்த தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பழங்குடியின மாணவி விஜயலட்சுமிக்கு, திமுக எம்.பி கனிமொழி உதவி கரம் நீட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி: சாதி சான்றிதழ் தர மறுக்கும் அதிகாரிகள்: கேள்விக்குறியான பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவு
சாதி சான்றிதழ் கிடைக்காததால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை என புதிய தலைமுறையில் பேட்டியளித்திருந்தார் மாணவி விஜயலட்சுமி. நேற்று வெளியாகியிருந்த இந்த செய்தியை கண்ட தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. கனிமொழி, மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று அலைபேசியில் பேசி விசாரித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஆலடி அருணாவின் மகன் எழில்வாணனுக்கு சொந்தமான ஐன்ஸ்டீன் கல்லூரியில் எந்த ஒரு கட்டணமும் இன்றி மாணவி கல்லூரி படிப்பை தொடங்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஒரு மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த தகவலை மாணவி விஜயலட்சுமியின் தந்தை சங்கர் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். தன் கல்லூரிக் கனவை நனவாக்கிய எம்.பி. கனிமொழிக்கு தொலைபேசியிலேயே நன்றி தெரிவித்தார்.
- நெல்லை நாகராஜன் மற்றும் சுந்தரமகேஷ்
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!