[X] Close

நான் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை: ஸ்ரீசாந்த் டென்ஷன்!

BCCI-not-above-God--says-angry-Sreesanth

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நான் பிச்சை கேட்கவில்லை என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கோபமாகக் கூறியுள்ளார்.


Advertisement

சூதாட்ட புகார் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்திருந்தது. இதை நீக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்ய, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இதனால் கோபம் அடைந்துள்ள ஸ்ரீசாந்த், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நான் பிச்சை கேட்கவில்லை. எனது வாழ்வாதாரத்தை மீண்டும் எனக்கு தாருங்கள் என்றே கேட்கிறேன். அது என் உரிமை. நான் மீண்டும் விளையாடுவேன். நீங்கள் ஒன்றும் கடவுளுக்கு மேலானவர்கள் இல்லை. நான் அப்பாவி என்று மீண்டும், மீண்டும் நிரூபித்த பின்னரும் இந்திய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுப்பது ஏன்?’ என்று கோபமாகக் கேட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close