
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் அவரோடு தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனோடு தொடர்பில் இருந்த 251 பேரை கேரள சுகாதாரத்துறை அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் 38 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 8 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு நிபா பாதிப்பு இல்லை என தெரியவந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
அறிகுறிகள் கண்டறியப்பட்ட அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள புனே ஆய்வகத்திலிருந்து நிபுணர்கள் கேரளா சென்றுள்ளனர்.