[X] Close

’அந்தாதூன்’ மலையாள ரீமேக்: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ’பிரம்மம்’

சினிமா

Actor-prithviraj-Bhramam-the-official-Andhadhun-Malayalam-remake-is-going-to-Direct-OTT-release

’அந்தாதூன்’மலையாள ரீமேக் ’பிரம்மம்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.


Advertisement

கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது ’அந்தாதூன்’ திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது.

இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது.


Advertisement

image

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரஷாந்த் நடித்து முடித்துள்ளார். அதேபோல, மலையாள ரீமேக்கான ’பிரம்மம்’ படத்தில் பிரித்விராஜ், மம்தா மோகன் தாஸ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ரவி கே சந்திரன் இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, பிரித்விராஜின் ‘கோல்டு கேஸ்’, ’குருதி’ உள்ளிட்டப் படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close