[X] Close

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அபாரம்

விளையாட்டு

Indian-Fast-Bowler-Jasprit-Bumrah-takes-his-Hundredth-wicket-in-Test-Cricket-at-the-Oval-Test--

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நூறாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆலி போப்பை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார்.  


Advertisement

image

தனது 24-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அதோடு அதிவேகமாக, 100 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய பும்ரா இந்தியாவுக்காக கடந்த 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.


Advertisement

image

கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் எனக்கும் பும்ராவின் 100 விக்கெட்டுகளில் இந்த விக்கெட்தான் பிடிக்கும் என சமூக வலைத்தளங்களில்  வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.  இந்த ஆட்டதில் தனது 101-வது விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றி உள்ளார். அவரது வேகம் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பும்ரா 24 போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதற்கு முன்னதாக கபில் தேவ் (25), இர்பான் பதான் (28), முகமது ஷமி (29), ஸ்ரீநாத் (30), இஷாந்த் ஷர்மா (33) போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி உள்ளனர். 


Advertisement

இங்கிலாந்து இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

இதையும் படிக்கலாம் : ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய அணி? - ஒரு அலசல்


Advertisement

Advertisement
[X] Close