”மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க வெங்கட் பிரபு” - ஹர்பஜன் சிங்

”மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க வெங்கட் பிரபு” - ஹர்பஜன் சிங்
”மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க வெங்கட் பிரபு” - ஹர்பஜன் சிங்

“மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என்று வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமீபத்தில், இப்படத்தின் டீசர் கவனம் ஈர்த்த நிலையில், நடிகை லாஸ்லியா தேவாவுடன் பாடிய ’அடிச்சி பறக்கவிடுமா’ பாடலும் வெளியானது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி ’பிரண்ட்ஷிப்’ தியேட்டர்களில் வெளியாகிறது.

இன்று இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதனை, ரீட்விட் செய்துள்ள ஹர்பஜன் சிங் “வெங்கட்
ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com