[X] Close

'தி ஆல்கமிஸ்ட்' எழுத்தாளரை கவர்ந்த கேரள ஆட்டோ! - வைரல் புகைப்படத்தின் பின்னணி

சிறப்புக் களம்

writer-Paulo-Coelho-shares-pic-of-Kerala-auto-carrying-his-name

உலகப் புகழ்பெற்ற பிரேசிலைச் சேர்ந்த எழுத்தாளரும், 'ஆல்கமிஸ்ட்' நாவல் மூலம் இலக்கிய வாசகர்களை ஈர்த்தவருமான பவுலோ கோயலோ (Paulo Coelho) தனது பெயர் எழுதப்பட்ட கேரள ஆட்டோவின் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்திருக்கிறார். அந்த வைரல் புகைப்படத்தின் பின்னணியைப் பார்ப்போம்.


Advertisement

புகழ்பெற்ற பிரேசிலிய நாவலாசிரியர் பவுலோ கோயலோ. இவரின் சமீபத்திய பதிவு வைரலாகி வருகிறது. அவரின் பதிவு வைரல் பின்னணியில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிரதீப் என்ற 55 வயது ஆட்டோ உரிமையாளர் இருக்கிறார். பவுலோ கோயலோ நாவல்களுக்கு பரம ரசிகரான பிரதீப் தனது ஆட்டோவின் பின்புறத்தில், "பவுலோ கோயலோ'' பெயரை ஆங்கிலத்திலும், அவரின் புகழ்பெற்ற நாவலான "தி ஆல்கமிஸ்ட்" என்ற பெயரை மலையாளத்திலும் எழுதியிருந்தார்.

இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டு, ``கேரளா, இந்தியா (இந்தப் புகைப்படத்திற்கு மிக்க நன்றி)" என்று பதிவிட்டு இருந்தார். சில மணிநேரங்களில் இந்தப் பதிவக்கு 13,700 லைக்குகள், 1,143 ரீ-ட்வீட்கள் மற்றும் 185 கமெண்டுகள் என வைரலாகின. ஆட்டோ டிரைவர் பிரதீப் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது மகனால் இந்த செய்தியை அறிந்துகொண்டார். தனது ஆஸ்தான நாயகனிடம் இருந்து ரெஸ்பான்ஸ் கிடைக்க, இப்போது மகிழ்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்.


Advertisement

இந்தச் சம்பவம் குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விடம் பேசிய பிரதீப், ``கோயலோவை சந்திக்க பிரேசிலுக்கு ஒருநாள் செல்ல வேண்டும். அவரின் ஒவ்வொரு நாவலிலும், வாசகர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன. அவருடைய மற்ற படைப்புகளையும் படித்திருக்கிறேன், என்றாலும் 'தி ஆல்கமிஸ்ட்' எனக்கு பிடித்த நூல்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

கேரளாவில் பவுலோ கோயலோ பற்றிய பேச்சுக்கள் எழுவது இது முதல்முறை கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் `கோச்சவ்வ பவுலோ ஐயப்பா கோயலோ' என்ற திரைப்படம் வெளியானது. அப்போதும் பவுலோ கோயலோ கேரளா குறித்த செய்திகளை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close