Published : 06,Sep 2021 04:31 PM

தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதும் ’வலிமை’?

Ajith-valimai-movie-to-be-released-with-Rajinikanth-Annaatthe

அஜித்தின் ’வலிமை’ தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு போனி கபூர் ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ‘நாங்க வேற மாரி’ முதல் பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், விரைவில் இரண்டாம் பாடலை வெளியிடவுள்ளனர் படக்குழுவினர். அதோடு, ’வலிமை’ படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால் இம்மாதத்திற்குள் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

’வலிமை’ கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளதால், படக்குழுவினர் இந்த ஆண்டுக்குள் ‘வலிமை’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். வரும் தீபாவளியையொட்டி நவம்பர் மாதம் ‘வலிமை’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

image

தீபாவளியையொட்டித்தான், சிறுத்தை சிவா இயக்கியுள்ள ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தார். தற்போது, இரண்டு படங்களும் நேரடியாக மோதுவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு அஜித்தின் ‘விஸ்வாசம்' படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும் பொங்கலையொட்டி வெளியாகின. ’விஸ்வாசம்’தான் வசூல் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்