[X] Close

புதுச்சேரி: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கார் டிரைவர் போக்சோவில் கைது

இந்தியா,குற்றம்

Puducherry-A-car-driver-has-been-arrested-in-Pokso-for-sexually-abusing-a-schoolgirl

புதுச்சேரியில் 14 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Advertisement

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் இது குறித்து அவரிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ் பெரியான் (31) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்று மாதமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக சதீஷ் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷை பெரியானை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close