[X] Close

அடுத்தடுத்து இரண்டு அரைசதம் - பேட்டிங்கில் அசத்தும் ஷர்துல் தாக்கூர்!

விளையாட்டு

Indian-Cricketer-Shardul-Thakur-hit-back-to-back-innings-Half-Century-in-The-Oval-Test-Cricket-Match-against-England-Team

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அணிக்காக அவர் பேட்டிங்கில் கொடுத்துள்ள பங்களிப்பு இந்த ஆட்டத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

முதல் இன்னிங்ஸில் 36 பந்துகளுக்கு 57 ரன்களை குவித்திருந்தார் அவர். இரண்டாவது இன்னிங்ஸில் 72 பந்துகளில் 60 ரன்களை அடித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கூர் பதிவு செய்துள்ள மூன்றாவது அரை சதமாகும். 

இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பண்ட் உடன் சேர்ந்து 100 ரன்களுக்கு ஏழாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அவர். இறுதியில் ரூட் சுழலில் சிக்கி அவுட்டானார். தேநீர் நேர இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 445 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இன்னும் நான்கு செஷன் எஞ்சியுள்ளது. நாளை நாள் ஆட்டம் ஐந்தாவது நாள் ஆட்டமாகும். தற்போது பும்ரா 19, உமேஷ் யாதவ் 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ரிஷப் பண்ட் ஏற்கனவே 50 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து இருந்தார். 


Advertisement

Advertisement
[X] Close