Published : 11,Aug 2017 02:21 PM

டெல்லியில் முகாமிட்ட ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள்: இறுதிக்கட்டத்தில் இணைப்புப் பேச்சு?

Final-talks-for-the-merge-of-ADMK--OPS-and-EPS-team-held-in-Delhi

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளுக்கான இணைப்புப் பேச்சுவார்த்தை டெல்லியில் வேகமெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்த இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை பாஜகவின் மேற்பார்வையில் திரைமறைவில் நடைபெறுவதாக பல்வேறு ஹேஷ்யங்கள் உலா வருகின்றன. இதில் ஓபிஎஸ் அணிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்றும், ஓபிஎஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. 

முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடரவும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கம்போல நிதித்துறையை ஓபிஎஸ்-க்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஓபிஎஸ் இருப்பார் என்றும் இணைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்