[X] Close

நாட்டிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டமாக திகழ்கிறது பெங்களூரு! ஆய்வில் தகவல்

இந்தியா

Bangalore-is-the-most-linguistic-diversity-district-in-the-country-a-study-reveals-from-Data-Analysis

நாட்டிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டமாக திகழ்கிறது கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரு. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. 


Advertisement

இந்தியாவின் அலுவல் மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட மொத்தம் 107 மொழிகள் பெங்களூருவில் பேசப்பட்டது வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் மக்கள் அதிகம் பேசும் பொழிகளில் கன்னடம் 44.5 சதவிகிதம் பிடித்துள்ளது. அதையடுத்து தமிழ் மொழி 15 சதவிகிதமும், தெலுங்கு 14 சதவிகிதமும், உருது 12 சதவிகிதமும், இந்தி 6 சதவிகிதமும், மலையாளம் 3 சதவிகிதமும் பேசப்பட்டு வருகிறது. 

பெங்களூருவுக்கு அடுத்தபடியா நாகாலந்து, அசாம், மேற்கு வங்கம், மேகாலயா, தென்மேற்கு டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாவட்டங்களில் அதிகளவில் மக்கள் பல மொழிகளை பேசி வருகின்றனர் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close