[X] Close

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் கேசவ் தேசிராஜு சென்னையில் காலமானார்

இந்தியா

Sarvapalli-Radhakrishnan-s-grandson-Keshav-Desiraju-passed-away-in-Chennai-due-to-ill-health

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.


Advertisement

முன்னாள் மத்திய சுகாதார துறை செயலாளர் கேசவ் தேசிராஜா இதய கோளாறு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. சென்னையில் பிறந்த கேசவ் தேசிராஜா, தொடக்க கல்வியை டேராடூனிலும், உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேசவ், மத்திய சுகாதார துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். மனநல சுகாதார சட்டம் கொண்டு வருவதற்கு காரணமாகவும், மன சுகாதார திட்ட நிலை குழுவில் கேசவ் தேசிராஜா உறுப்பினராக இருந்துள்ளார். அடையாறு புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருக்கிறார். 2018ல் இவர் எழுதிய இந்திய சுகாதார அமைப்பின் ஊழல் எனும் புத்தகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது போல கர்நாடக இசையில் நாட்டம் கொண்ட கேசவ் தேசிராஜா எழுதிய எம்.எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு புத்தகம் பலத்த வரவேற்பை பெற்றுள்ள புத்தகம் ஆகும்.

image


Advertisement

2015ல் இந்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கேசவ் தேசிராஜா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட கேசவ் தேசிராஜா, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த கேசவ தேசிராஜா, சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகள் வழி பேரன் கேசவ தேசிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பால வெற்றிவேல்

இதனைப்படிக்க: ஆசிரியர் தினம்: டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்த சேலம் மாணவி 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close